மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய வேளையில்
தற்போது 60, 61 மற்றும் 62 வயதுடைய மருத்துவர்கள் முறையே 61, 62 மற்றும் 63 வயது வரை பணியாற்ற அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளதுடன்
59 வயதுடைய வைத்தியர்கள் 60 வயதிற்குள் ஓய்வு பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.