மொனராகல புத்தள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனமல்வில பிரதேசத்தில், இரு கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், கஞ்சா செய்கையை மேற்கொண்டு வந்த நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 2,000 கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, கஞ்சா சேனை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





