உலக
கத்தோலிக்க திரு அவை இன்றைய தினம் பொதுக்காலத்தின் முப்பதாவது ஞாயிறு
வாரமாக ‘நீங்கள் என் சாட்சிகளாக இருப்பீர்கள் ‘எனும் கருப்பொருளில் உலக
மறைபரப்பு தினத்தினை கொண்டாடுகின்றது .
1822 ஆம் ஆண்டு பிரான் நாட்டில் லியோன் என்னும் நகரில் செல்வி மாரி பொலின் ஜெரிக்கோ என்பவரால் மறைபரப்பு சேவையினை உலக நாடுகளில் வளர்க்க வேண்டும் என்ற நோக்காக கொண்டு மறைபரப்பு சபையினை ஆரம்பித்துள்ளார்.
இச்சபையினை உலக கத்தோலிக்க திருச்சபையினால் அங்கீகரிக்கப்பட்டு வருடந்தோறும் ஒக்டொபர் மாதம் 23 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் உலக மறைபரப்பு தினமாக கொண்டாடப்படுகின்ற நிலையில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் அனைத்து கத்தோலிக்க திரு அவைகளிலும் விசேட திருப்பலியுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அந்தவகையில் மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில்
கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக மறைபரப்பு பணியை ஆற்றி வருகின்ற மெக்சிகோ
நாட்டு அருட்சகோதரிகளின் ஒழுங்கமைப்பில் பங்கு பாலத்துவசபையுடன் மறை
ஆசிரியர்கள் இணைந்து பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில்
விசேட மறைபரப்பு ஞாயிறு திருப்பலி சிறப்பிக்கப்பட்டது .
மறைபரப்பு
ஞாயிறு தினத்தை சிறப்பைக்கும் வகையில் கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார்
ஆலய பங்கில் மறை பணியை ஆற்றி வரும் மெக்சிகோ நாட்டு அருட்சகோதரிகளின்
ஏற்பாட்டில் கல்லடி டச்பார் பங்கில் மறைபணியாளர்களாக பணியாற்ற
புதுப்பிக்கப்பட்ட பணியாளர்கள் அர்ப்பணம் செய்துகொள்ளும் நிகழ்வு
இடம்பெற்றது .
இதேவேளை முதல் முறையாக இலங்கையில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய பங்கில் பொதுநிலை மறை பணியாளராக நிதர்சன் என்பவர் தனது அர்ப்பணத்தை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





