வவுனியா- நெடுங்கேணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் சம்பவ இடத்திவேயே உயிரிழந்துள்ளார்.


 

வவுனியா- நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் சம்பவ இடத்திவேயே உயிரிழந்துள்ளார். 

அடையாளந்தெரியாதவர்களால் நேற்று (18) துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா சிவா நகர் பகுதியை சேர்ந்த துரைராஜசிங்கம் பிரமிளா என்ற 21 வயது யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

குறித்த யுவதி தனது வீட்டில் இருந்து வெளியில் வரும்போதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.