மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வுகள் கடந்த 18.10.2022 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை அதிபர் திரு க.சந்திரகுமார் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா கல்வி வலயத்தின் திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளர் திரு.எஸ். துஷ்யந்தன் அவர்களும், கௌரவ அதிதிகளாக செங்கலடி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் தலைவர் திரு.க. துரைராசா அவர்களும், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளை தலைவர் திரு. த. வசந்தராசா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மற்றும் இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.கு. ஜெயப்பிரியன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களதும், ஆசிரியர்களதும் கலைநிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
.jpeg)


.jpeg)







