மட்டக்களப்பு மகிழூர்முனை தூய சதா சகாய அன்னையின் புதிய ஆலய திறப்பு விழா.

 


மட்டக்களப்பு மகிழூர்முனை தூய சதா சகாய அன்னையின் புதிய ஆலயம் நேர்ந்தளிக்கப்பட்டு ஆலய திறப்பு விழா கூட்டுத் திருப்பலி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து ஒப்புக்கொடுத்தனர் .

மட்டக்களப்பு மகிழூர்முனை தூய சதா சகாய அன்னையின் புதிய ஆலயம் நேர்ந்தளிக்கப்பட்டு ஆலய திறப்பு விழா கூட்டுத் திருப்பலி தூய சதா சகாய அன்னையின் ஆலயம் பங்கு மக்கள் ,நலன் விரும்பிகள் மற்றும் மகிழூர்முனை பொது மக்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட மகிழூர்முனை தூய சதா சகாய அன்னையின் புதிய ஆலயம் நேற்று மாலை மறைமாவட்ட ஆயரினால் நேர்ந்தளிக்கப்பட்டு திறப்பு விழா விசேட கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது .

ஆலய நேர்ந்தளிப்பு விசேட திருப்பலியில் போது ஆலய திறப்பு விழாவினை சிறப்பிக்கும் வகையில் பங்கு பிள்ளைகளுக்கான திருவருட்சாதனகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ,ஆலய நிர்மாண பணியினை மேற்கொண்ட பொறியிலாளர்,மேசன்,ஒத்துழைப்பு வழங்கி ஆலய நிர்வாக சபையினருக்கு நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .

இதனை தொடர்ந்து ஆலயத்தினை சுற்றி அன்னையின் திருச்சிசுருவ அன்னையின் திருச்சிசுருவ ஆசீரும் இடம்பெற்றது . அடியார்களுக்கான அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டன .
மட்டக்களப்பு மகிழூர்முனை தூய சதா சகாய அன்னையின் புதிய ஆலய நேர்ந்தளிப்பு திறப்பு விழா கூட்டுத் திருப்பலியில் மறை மாவட்ட அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் , ஆலய பங்குமக்கள் ,மகிழூர்முனை பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு ஆலய திறப்பு விழா திருப்பலியை சிறப்பித்தனர்