கரித்தாஸ் எகெட் நிறுவனம் சிவிக் டயலொக் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய கிராமங்களில் சிறுவர்களை மையமாக கொண்டு சிறுவர் கழகங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வரும் எகெட் நிறுவனம் கிராம மட்ட சிறுவர் கழக சிறார்களுக்கான கல்வி,சுகாதாரம்,பாதுகாப்பு,சிறுவர்களின் ஆற்றல்,திறன் விருத்தி ,தலைமைத்துவம் போன்ற அடிப்படை பயிற்சி செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது
இத்திட்டத்தின் கீழ் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவின் கொத்தியாபுலை ,வாழக்காளை,இலுப்படிச்சிச்சேனை ,முள்ளாமுனை ஆகிய கிராம செயலாளர் பிரிவுகளில் இயங்கி வரும் கிராம மட்ட சிறுவர் கழக சிறுவர்களுக்காக சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சிறுவர் தின சித்திர போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயத்தில் நடைபெற்றது.
எகெட் நிறுவன சிவிக் டயலொக் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் டொம்னிக் சுதர்சன் ஒழுங்கமைப்பில் நிறுவனத்தின் இயக்குனர் அருட்பணி எ.ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்ற சிறுவர் தின சித்திர போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவு உத்தியோகத்தர் எஸ்.மணிவண்ணன் கலந்துகொண்டார்.
மாணவ சிறார்களின் வரவேற்பு மங்கள விளக்கேற்றல்,கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான நிகழ்வில் கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலய மாணவர்கள் உட்பட கொத்தியாபுலை அறநெறி பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,சிறுவர் கழக ஒருங்கிணைப்பாளர்கள் ,இளைஞர் கழக உறுப்பினர்கள் எகெட் நிறுவன ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டதுடன் சித்தரப்போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற சிறுவர்களுக்கான பணப்பரிசில்களுடன் சான்றிதழ்களும் ,போட்டியில் பங்குபற்றிய சிறார்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன





