ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களில் உள்ள தோட்டப் பகுதிகளில் உள்ளப் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, தலைமையில் நேற்று (18) காலையில் கூடியது. அதன்பின்னர் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவின் கேள்விக்கு பதிலளித்து கருத்துரைக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கல்வி அமைச்சின் முழு ஒத்துழைப்போடு தோட்டப் பகுதிகளில் உள்ளப் பாடசாலைகள் தொடர்பில் ஆராயுறுமாறு கல்வி இராஜாங்க அமைச்சருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த வருடத்தின் இறுதிக்குள் தோட்டப் பகுதிப் பாடசாலை மாணவர்களின் போசாக்கு மட்டத்தை 50 சதவீதத்தை விட அதிகரிக்கவே எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





