பன்னீசைப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

 

 


 

மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஸ்ரீசித்திவிநாயகர் விக்னேஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட பன்னீசைப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

மாணவர்கள் மத்தியில் இந்துமத சிந்தனையினை ஏற்படுத்தி ஆற்றுப்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.

அமரர் செல்லையா சுப்ரமணியம் ஞாபகார்த்தமாக அவரது குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் இந்த போட்டிகள் நடாத்தப்பட்டன.
இதன் பரிசளிப்பு விழா ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்றது.

ஆனைப்பந்தி ஸ்ரீசித்திவிநாயகர் விக்னேஸ்வரர் ஆலயத்தின் தலைவர் மங்களிராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக முன்னாள் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுபாசக்கரவர்த்தியும் கௌரவ அதிதிகளாக திருமதி. சிதம்பரபிள்ளை அசலாம்பிகை மணோன்மனி ,திருமதி. இரட்ணம் மங்கேளஸ்வரி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது வெற்றிபெற்ற போட்டியாளர்களின் பன்னிசைகள் இசைக்கப்பட்டதுடன் வெற்றிபெற்றவர்களுக்கான பதக்கங்கள்,சான்றிதழ்களும் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
அத்துடன் போட்டிகளை வழி நடாத்திய ஆசிரியர்கள்,அதற்கு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கிய கல்வித்திணைக்கள அதிகாரிகள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.