சன்றைஸ் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டிகள் இன்று காலை ஆரம்பமானது.

 

 


மட்டக்களப்பு சின்னஊறணி சன்றைஸ் விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் இன்னாள் வீரர்கள் கலந்துகொள்ளும் சன்றைஸ் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டிகள் இன்று காலை ஆரம்பமானது.

இந்த ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் இந்த சுற்றுப்போட்டி சின்னஊறணி சன்றைஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு இந்த பிரிமியர் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதன் ஆரம்ப நிகழ்வு சன்றைஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் மாநகரசபையின் பிரதி முதல்வருமான க.சத்தியசீலன் தலைமையில் ஆரம்பமானது.
இதன் ஆரம்ப நிகழ்வில் கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.பி.விமரத்தின மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் இதன்போது அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.

சன்றைஸ் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டிகளில் புதிய பழைய வீரர்கள் இணைந்ததாக நான்கு அணிகளும் பிரிக்கப்பட்டு இந்த சுற்றுப்போட்டி சிறப்பான முறையில் ஆரம்பமானது.

இதன்போது தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு அதிதிகளுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கான போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு சுற்றுபோட்டி ஆரம்பமானது.