அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 45 பேர் கைது.

 

 


சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 45 பேர் உனவட்டுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து,  கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினரின் உதவியுடன் ஹபராதுவ பொலிஸ் நிலைத்தில் கடமையாற்றும் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும்  ஏழு பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கான நம்பிக்கையில் குழு கிட்டத்தட்ட ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் தங்கியிருந்த நிலையில், இவர்கள் சனிக்கிழமை (22) வவுனியாவில் இருந்து பஸ்ஸில் ஹோட்டலுக்கு வந்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்களை
காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டனர்.