மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலாசார மற்றும் இலக்கிய விழா நிகழ்வு நந்தகோபன் கலாசார மண்டபத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே.கருணாகரன் கலந்து சிறப்பித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களும் கௌரவ அதிதிகளாக சுகாதார வைத்திய அதிகாரி த.பிரபாசங்கர், கோட்டக்கல்வி அதிகாரி சீ.தில்லைநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்ததுடன் மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி. எல்.விவேகானந்தராஜ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. எம்.ஜெயசந்திரன், பாடசாலை அதிபர்கள், பிரதேச கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சிகரம் நூல் வெளியீடும், 8 கலைஞர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றதுடன் இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



.jpeg)

.jpeg)

.jpeg)




