பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் (International Day for the Elimination of Violence Against Women)





உலகளவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் உடல், மன மற்றும் பாலியல் ரீதியான அனைத்து வன்முறைகளையும் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

1960-ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று டொமினிகன் குடியரசின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடிய மிராபல் சகோதரிகள் (Mirabal sisters) படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை இதனை அதிகாரப்பூர்வ சர்வதேச தினமாக அறிவித்தது

16 நாள் விழிப்புணர்வு இயக்கம். நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம், டிசம்பர் 10-ஆம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினம் வரை 16 நாட்களுக்கு உலகெங்கிலும் முன்னெடுக்கப்படுகிறது

2026-ஆம் ஆண்டின் கருப்பொருள் (Theme)
"பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க ஒன்றிணைவோம்: நீதியை உறுதி செய்வோம், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்போம், தண்டனையிலிருந்து தப்புவதை முடிவுக்குக் கொண்டுவருவோம்."
(UNiTE to End Violence Against Women and Girls: Ensure justice, protect survivors, end impunity)