சீனத் தூதரகம் மற்றும் பொலிஸ் சேவைகள் பிரிவின் தலைவி சட்டத்தரணி நில்மினி நீட்டா சமரதுங்க ஆகியோரின் ஒருங்கிணைப்பில், இரட்டைக் குழந்தைகளுக்கு மூன்று வயது பூர்த்தியாகும் வரை இலவசமாகப் பால்மா வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சீனத் தூதுவரின் தலைமையில், வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திலக் சி. தனபால மற்றும் பொலிஸ் சேவைகள் பிரிவின் தலைவி நில்மினி நீட்டா சமரதுங்க ஆகியோரின் பங்கேற்புடன், கடந்த 14 ஆம் திகதி அநுராதபுரம் கோல்டன் மாம்போ ஹோட்டலில் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையங்கள் (CICT) நிறுவனத்தின் அனுசரணையுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, அநுராதபுரம் பொலிஸ் பிரிவில் பணியாற்றும் சிறிய பதவி நிலை உத்தியோகத்தர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களும் அடையாள ரீதியாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சீனத் தூதுவர் உள்ளிட்ட சீனப் பிரதிநிதிகள், கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையங்கள் (CICT) நிறுவனத்தின் முகாமைத்துவப் பிரதிநிதிகள், வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுகதபால, அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன பிரம்மணகே, பொலிஸ் சேவைகள் பிரிவின் பெண் பிரதம பொலிஸ் பரிசோதகர் பத்மினி ஜயவீர உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.








