
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராங்குளம், தர்மபுரம் கடற்கரையில் உள்ள மீனவர்களின் வாடி ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை (05) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
மீனவர்களின் வாடியில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், காத்தான்குடி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி N. மணிகரண் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டார்
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில், உயிரிழந்தவர் கிராங்குளம் தர்மபுரத்தைச் சேர்ந்த 49 வயதுடைய N. ஞானசெல்வம் மகாலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த 5 வருடங்களாக குறித்த மீன்வாடியில் தங்கி பணிபுரிந்து வந்தவர் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




