மக்கள் சக்தி எம்மோடு இணைந்து இருக்கும் வரை கடந்த கால ஆட்சியாளர்களால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்த முடியாது- மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு

 

வரதன்,



மக்கள் சக்தி எம்மோடு இணைந்து இருக்கும் வரை கடந்த கால ஆட்சியாளர்களால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்த முடியாது- மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் கந்தசாமி பிரபு

 கடந்த காலங்களில் ஆட்சி அமைத்து மக்களால் விரட்டி அடிக்கப் பட்டவர்கள் இந்த அரசியல் அதிகாரத்தை தாம்  எங்களுக்கு வழங்கியதாக தற்போது தற்போது ஒரு கருத்தியலை முன்வைத்து வருகின்றனர்

 கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் இந்த நாட்டை எந்த நிலைக்கு விட்டுச் சென்றுள்ளனர் என்பது பற்றி மக்களுக்கு நன்கு தெரியும் இவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன என்று ம் மக்களுக்காக என்ன நலத்திட்டங்களை கொண்டு வந்தீர்கள் ஏன் மக்கள் உங்களை விரட்டியடித்தார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்

 பின்வாசலால் ஓடிய ஜனாதிபதி கடந்த காலங்களில் இருந்து இருக்கின்றார்கள் இவர்கள் நாட்டை சீரழித்து
நாட்டை வங்குரத்தாக்கி எங்களுக்கு தந்திருந்தார்கள் அரச கஜானாக்களை இல்லாத ஆக்கி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் குற்ற செயல்களோடு சம்பந்தப்பட்டவர்கள் தான் கடந்த காலங்களில் அரசியல் பயணங்களை முன்னெடுத்திருந்தார்கள்

 எமது அரசாங்கத்தின் ஊடாக தற்போது ஊழலை இல்லாத செய்திருக்கின்றோம் வீண் விரயங்களை தடுத்து மக்களுக்கு தேவையான விடயங்களை தற்போது முன்னெடுத்து வருகின்றோம் அரசியல் அதிகாரம் மக்களால் தீர்மானிக்கப்படும் வரை எதிர்க்கட்சியினரால் ஒன்றும் செய்து விட முடியாது 

 என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இன்று மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்தை தெரிவித்தார்