மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான "அத்தம" தேசிய நிகழ்வு படுவான்கரையில்யில் முன்னெடுப்பு










வரதன்.



​ ​"க்ளீன் ஸ்ரீ லங்கா - அத்தம" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு  பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அரசடித்தீவு 
பிரதான வீதியில் இடம்பெற்றது.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் ஏற்பாட்டில்  இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளராக திரேஸ்குமார்,  மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது. 

​ இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராணுவ படைப்பிரிவின் உயரதிகாரிகள்,  பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி , பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.  

​சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ்  அரசடித்தீவு 
பிரதான வீதிப் பகுதியில் உள்ள வடிகான்களைத் துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.