டிக்வா புயலினால் பாதிக்கப்பட்ட வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பயனாளிகளுக்கான புதிய வீடுகள் கையளிக்கும் நிகழ்வு

 












 வரதன்,

  மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த டிக்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புதிய வீடுகளை கையளிக்கும் நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது

 இதே வேலை  பாதிக்கப்பட்ட வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  பனிச்சங்கேணி  கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல்   பிரதேச செயலாளர் திருமதி K. அமழினி தலைமையில் இடம்பெற்றது

 இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு கலந்து கொண்டு 50 லட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 2   வீடுகளை திறந்து வைத்து பார்வையிட்டதுடன் பயனாளிகளிடம் அதனை வழங்கி வைத்தார்

வாகரை பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள் ஊழியர்கள் இப்பகுதிக்கான பிரஜா சக்தி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்