மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலய மாணவர்கள், அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டியின் மாகாண மட்டப் போட்டிகளில் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் முதலாம் இடங்களைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இதற்கமைய,
1. கீர்த்தனை – நடனப் போட்டி (தனி ஆண் பிரிவு)
இப்போட்டியில் பங்குபற்றிய செல்வன் நகுலேஸ்வரன் பிரித்தீவ் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவருக்கான வழிகாட்டலைப் பொறுப்பாசிரியர் திருமதி நீரஜா நிமலன் வழங்கியுள்ளார்.
2. கீதம் – வயலின் போட்டி (தனி ஆண் பிரிவு)
இப்போட்டியில் பங்குபற்றிய செல்வன் அ. தீரன் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவருக்கான வழிகாட்டலைப் பொறுப்பாசிரியர் திருமதி சாரங்கி நரேந்திரா வழங்கியுள்ளார்.
3. மெல்லிசைப் பாடல் – தமிழ் திரையிசைப் பாடல் போட்டி (தனி ஆண் பிரிவு)
இப்போட்டியில் பங்குபற்றிய செல்வன் துஷாரிகன் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கான வழிகாட்டலையும் பொறுப்பாசிரியர் திருமதி சாரங்கி நரேந்திரா வழங்கியுள்ளார்.
மூன்று பிரிவுகளிலும் முதலாம் இடங்களைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்குப் பாடசாலைச் சமூகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அர்ப்பணிப்புடன் பயிற்சியளித்து வெற்றிப் பாதைக்கு வழிநடத்திய பொறுப்பாசிரியர்களான திருமதி நீரஜா நிமலன், திருமதி சாரங்கி நரேந்திரா ஆகியோருக்கும், பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கல்வியில் மட்டுமன்றி கலைத்துறையிலும் தமது ஆளுமையையும் திறமையையும் வெளிப்படுத்தி வரும் சிவாநந்த வித்தியாலய மாணவர்களின் இந்த முப்பெரும் வெற்றி, பாடசாலையின் கலைத்துறை வளர்ச்சிக்கு மேலும் வலுச்சேர்த்துள்ளது.
கலையிலும் கல்வியிலும் சிவாநந்தியர்களின் சாதனைப் பயணம் தொடரட்டும்!







