ராமசாமி துரைரெட்ணம்
1990ஆம் ஆண்டிற்கு முதல் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளராக தமிழ் ஊடகத்துறைக்கு அறிமுகமான ஜெயந்திமாலா அழகு குணசீலன் சுவிஸ் நாட்டில் காலமானார்.
அவருக்கு எனது அஞ்சலிகள்.
மட்டக்களப்பு குருமன்வெளியை சேர்ந்த இவர் பிரபல எழுத்தாளர் அருள் செல்வநாயகம் அவர்களின் புதல்வியாவார். எழுத்தாளரும் அரசியல் பத்தி எழுத்தாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அழகு குணசீலனின் துணைவியுமாவார்.
அந்த காலத்தில் இலங்கையில் ரூபவாஹினி தொலைக்காட்சி மட்டுமே ஒளிபரப்பானது. தனியார் தொலைக்காட்சிகள் எதுவும் இல்லை. தொலைக்காட்சி என்றால் ரூபவாஹினிதான். வானொலி என்றால் இலங்கை வானொலி.மட்டும் தான்.
ரூபவாஹினியில் செய்திவாசிப்பாளராக இணைந்து கொள்வதென்றால் இலகுவான காரியமல்ல. பல தடைகளை தாண்டி தமிழ் ஒளிபரப்புதுறையில் தன்திறமையால் மிளிர்ந்த அவர் ஆரம்பத்தில் ஜெயந்திமாலா அருள் செல்வநாயகம் என்ற பெயரில் தமிழ் நேயர்களுக்கு அறிமுகமானார்.
அக்காலத்தில் சிறந்த ஒளிபரப்பாளராக செய்தி வாசிப்பாளராக நேயர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தார்.
1990ஆம் ஆண்டிற்கு பின்னர் தன் குடும்பத்துடன் சுவிஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்த அவர் 35ஆண்டுகளுக்கு மேலாக சுவிஸ் நாட்டில் வசித்து வந்தார்.
அழகு குணசீலன் 1980களின் பின்னர் இலங்கையில் இருந்;த காலத்தில் மிக நெருக்கமான நண்பராக இருந்தவர். அவர் சுவிஸிற்கு வந்தபின்னர் தொடர்புகள் அறுபட்டு போய்விட்டது. சில வருடங்களுக்கு முதல் சுவிஸில் நடந்த எனது நூல் வெளியீட்டிற்கு அழகு குணசீலனும் ஜெயந்திமாலாவும் வந்திருந்தனர். அதன் பின்னர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஜெயந்திமாலா எம்மை விட்டு விடைபெற்றார் என்ற கவலை மிகுந்த செய்தி கிடைத்திருக்கிறது. அவருக்கு எனது அஞ்சலிகள். அவரின் பிரிவால் துயரமடைந்திருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்