இலங்கைத் தமிழ் சினிமாவின் கலைப் பயணத்திற்குச் சர்வதேச அரங்கில் மேலும் ஒரு பெருமைமிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இலங்கைத் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான செல்வின் தாஸின் உருவப்படத்தையும், அவர் தயாரித்து நடித்த ‘கூத்தாடி’ திரைப்படத்தின் பெயரையும் தாங்கிய வகையில், சிறப்பு ஆஸ்திரேலிய அஞ்சல் முத்திரை வடிவம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் சினிமாவின் படைப்பாற்றலையும், கலைஞர்களின் அர்ப்பணிப்பையும் சர்வதேச அளவில் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அங்கீகாரம், ஈழத்துத் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்துள்ள மகிழ்ச்சிகரமான தருணமாகப் பார்க்கப்படுகிறது.
உள்ளூர் மண்ணில் உருவாகும் கலைப்படைப்புகள் சர்வதேச எல்லைகளைக் கடந்து கவனம் பெறுவது, எதிர்காலத் தமிழ் சினிமா படைப்பாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் புதிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
இத்தகைய கலை அடையாளங்கள் உலக அரங்கில் இடம்பிடிப்பது, இலங்கைத் தமிழ் சினிமாவின் வளர்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது.





