அறிமுகம் :ஆக்கம் - து. கௌரீஸ்வரன்.
(கமலா வாசுகி அவர்களின் கலைச் செயல்வாதங்களை விபரிக்கும் கட்டுரை, முன்னர் எழுதியது, அவர் அகவை அறுபதை அடையும் இன்றைய நாளில் முகநூலில் பதிவிடுவதில் மகிழ்ச்சி)
இலங்கைத் தமிழ்ச் சூழலில் பெண்ணிலைவாத நடவடிக்கைகளில் கடந்த மூன்று தசாப்த காலமாகத் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆளுமைகளுள் ஒருவராகக் கமலா வாசுகி அவர்கள் விளங்குகின்றார்.
பெண்ணிலைவாதச் சிந்தனைகளை அதற்கான வாழ்க்கை முறைகளைச் சமூகங்களின் அடிமட்டங்களுக்குக் கொண்டு சென்று பெண்களின் வல்லமைகளை வெளிக்கொண்டு வரும் ஒரு செயற்பாட்டுப் பெண்ணிலைவாதியாக இவர் தீவிரமாக இயங்கி வருகின்றார்.
பெண்ணிலைவாதத்தைப் புலமை நெறியில் நின்றும், ஆராய்ச்சி அணுகுமுறைகளுடனும் பார்ப்பதுடன் மட்டுமன்றி கலையாக்கச் செயற்பாடுகளுடாக சமூகங்களின் பல்வேறு மட்டங்களிலும் முன்னெடுக்கும் ஒரு பெண்ணிலைவாதக் கலைச்செயற்பாட்டாளராகச் சிறப்பாக இவர் அடையாளங் காணப்பட்டு வருகின்றார்.
அதாவது ஆராய்ச்சி,எழுத்து,உரையாடல் என்பவற்றுடன் பால்நிலைப் பாராபட்சமற்ற வாழ்க்கை முறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான சமூகமட்டச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் ஒரு செயல்வாதியாக இவர் செயலாற்றி வருகின்றார்.
இதற்கான பிரதான ஊடகமாகக் கலையாக்க நடவடிக்கைகளை இவர் பிரயோகித்து வருகின்றார்.
கமலா வாசுகி அவர்கள் ஒரு கலைஞியாகவும் பெண்ணிலைவாதியாகவும் விளங்குவதாற்தான் பெண்ணிலைவாதச் சிந்தனைகளைப் பரவலாக்கஞ் செய்து பிரயோகத்திற்குக் கொண்டு வருவதற்கு இவர் தன்னுடைய கலையாக்க வல்லமைகளைச் சிறப்பாகக் கையாண்டு வருகின்றார் எனலாம்.
தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் எத்தகைய சவால்கள் வந்த போதிலும் தான் நேசிக்கும் ஓவியக் கலையாக்க நடவடிக்கைகளை ஒரு போதும் கைவிடாதவராகத் தன்னுடைய ஓவியக் கலையாக்க வல்லமைகளை எதற்கும் விட்டுக் கொடுக்காதவராக ஓவியக் கலையாக்கங்களுடாகவே வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்
ஆரம்பம் :
இலங்கையின் யாழ் குடா நாட்டின் தெல்லிப்பளையில் அம்பிகாதேவி (கமலா) ஜெகநாதன் தம்பதியினருக்கு மூத்த மகளாக 1966.11.29 ஆந் திகதி பிறந்த வாசுகி அவர்களுக்கு ஒரு சகோதரன் இருக்கிறார். யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர். பிரபல நாடகச் செயற்பாட்டாளரான சி.ஜெயசங்கர் அவர்களைத் தனது வாழ்க்கைப் பங்காளனாக இணைத்துக் கொண்ட இவர் சிறு பராயத்திலிருந்தே ஓவியம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பாடசாலையில் இவருக்குக் கிடைத்த திருமதி எம்.வி.ஆர்.சின்னப்பு எனும் சித்திரப் பாட ஆசிரியையின் ஊக்கப்படுத்தலும், அதனைத் தொடர்ந்து பிரபல ஓவியக் கலைஞர் அ.மாற்கு மாஸ்டரிடம் பெற்ற பயிற்சிகளும் இவரைப் புத்தாக்க வல்லமை கொண்ட ஓர் ஓவியக் கலைஞியாகப் புடம் போட்டன.
ஓவியத்திலே தொடர்ந்து கற்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் ஓவியக் கற்கைகளுக்கான சமூக அங்கீகாரம் மற்றும் வசதி வாய்ப்புக்கள் யாழ் குடாநாட்டில் பரவலடையாத பின்புலத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் உயர்தரம் கற்றுப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்குச் செல்லுந் தகுதியைப் பெற்று அத்துறையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். எனினும் தன்னுடைய ஓவியம் மீதான ஈடுபாட்;டை ஒரு போதுங் கைவிட்டாரில்லை.
இப்பின்புலத்தில் இவருடைய இருபதாவது வயதில் யாழ் குடாநாட்டில் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் ஓவியக் கண்காட்சியில் அருந்ததி, சுகுணா, நிர்மலா ஆகியோருடைய ஓவியங்களால் கவரப்பட்டு ஓவியத்தினூடாகத் தன்னால் பயணித்து மேலெழ முடியும் என்ற நம்பிக்கையினையும், உத்வேகத்தையும் பெற்றுக் கொண்டார். ஓவியக் கலைஞி அருந்ததியுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். இவருடைய பெற்றார் வழங்கிய சுதந்திரமும் ஓவியம் மீதான அலாதிப் பிரியமும், சமூகப் பண்பாடுகள் குறித்த பிரக்ஞைபூர்வமான பார்வைகளும் மிக வேகமாக ஓர் ஓவியக் கலைஞியாகத் தன்னைப் பொது வெளியில் அறிமுகப்படுத்த வாய்ப்பளித்ததாகக் கூறுகின்றார்.
இந்திய இராணுவம் இலங்கையின் கிழக்கு வடக்கு மாகாணங்களில் அமைதிப்படை என்ற பெயரில் நிலைகொண்டிருந்த காலத்தில் யாழ் குடா நாட்டில் இரவு வேளைகளில் வீடுகளில் விளக்கு எரிவது பாதுகாப்பற்றதாக இருந்த சூழலில் வீட்டிலிருந்த பெரிய சாப்பாட்டு மேசையைச் சுற்றி மறைப்பிட்டு அதன் கீழ் விளக்கை ஒளிரச்செய்து அதனுள் மறைந்திருந்து அக்காலத்து அனுபவங்களை ஓவியங்களாக்கியுள்ளார்.
இந்த ஓவியங்கள் அக்காலத்தில் நிலவிய இராணுவ அரசியல் கெடுபிடிகளையும் அதனால் ஏற்பட்ட அனுபவங்களையும் பேசுபவையாக இருந்துள்ளன. அந்த ஓவியங்களை யாழ் பல்கலைக்கழகத்தில் 1989.02.02 ஆந் திகதி ஆரம்பித்து ஐந்து தினங்கள் முதன்முதலாகக் கண்காட்சிக்கு வைத்ததனூடாக வாசுகி என்ற பிரக்ஞையுள்ள ஓவியக் கலைஞியாகத் தன்னைப் பொது வெளியில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
பின்னர் இலங்கையின் தலைநகர் கொழும்பு சென்று அங்கே ஒரு வருடம் விபவி கலாசார நிலையத்தில் வேலைசெய்து விட்டு மீண்டும். யாழ்ப்பாணந் திரும்பினார். 1990 களின் பின்பிருந்து 1995 வரை யாழ் குடா நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு காத்திரமான அரங்கச் செயற்பாடுகளில் காண்பியக் கலைஞியாகப் பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்.
பின்னர் 1995 இல் மட்டக்களப்பு வருகின்றார். மட்டக்களப்பில் சூரியா பெண்கள் அமைப்பில் இணைந்து அதனூடாகப் பல்வேறு பெண்ணிலைவாத நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார். குறிப்பாகப் பெண்ணிலைவாதச் செயற்பாடுகளைக் கலையாக்க நடவடிக்கைகளுடாகப் பொது வெளிக்குக் கொண்டு செல்வதில் மிகுந்த ஆர்வத்துடன் செயலாற்றினார்.
இவ்வாறு கலைச் செயல்வாதமூடாகப் பெண்ணிலைவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தமையினூடாகவும் இடைவிடாத தொடர்ச்சியான பெண்ணிலைவாதச் செயற்பாடுகள் காரணமாகவும் அனைத்துலக மட்டத்திலான பெண்ணிலைவாதச் செயற்பாடுகளுடனும் அவற்றின் வலையமைப்பிலும் இணைந்து செயலாற்றுவதற்கான வாய்ப்புக்களை இவர் பெற்றுக்கொள்ள முடிந்தது. அனைத்துலக மட்டத்தில் பிரபல்யமான பெண்ணிலைவாதிகளின் அன்புக்குரிய தோழியாக வளர்ச்சி கண்டார்.
ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பிலும் அனைத்துலகத் தொண்டு நிறுவனங்களிலும் பெண்கள், சிறுவர்கள் சார்ந்த வேலைத்திட்டங்களுக்குப் பொறுப்பான அலுவலராக, நிபுணத்துவ ஆலோசகராகப் பல தளங்களில் கடமைகள் செய்யும் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டார். இதனூடாகப் பல காத்திரமான வேலைத்திட்டங்களை வடிவமைத்து முன்னெடுத்திருந்தார்.
தற்போது சங்கத் எனப்படும் தென்னாசிய பெண்கள் வலையப்பின் முக்கிய அங்கத்தவராகவும் "நூறு கோடி மக்கள் எழுச்சிச் செயற்பாட்டின்" இலங்கையின் இணைப்பாளராகவும் பெண்ணிலைவாதக் கலைச் செயற்பாடுகளில் சுயாதீனமாக இயங்கி வருகின்றார்.
இவருடைய காத்திரமான ஓவியச் செயற்பாடுகளைக் கவனத்திற் கொண்டு 2001 ஆம் ஆண்டு யப்பான் இலங்கை நட்புறவுச் சங்கம் இவருக்கு அனைத்துலக BUNKA AWARD வழங்கி மாண்பு செய்துள்ளது.
ஓவியக்காட்சிப்படுத்தல்கள்:
கமலா வாசுகி அவர்களின் ஓவியப் படைப்புக்களின் காட்சிகள் தனிநபர் கண்காட்சிகளாகவும், கூட்டு ஓவியக் கண்காட்சிகளாகவும் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்றுள்ளன. இந்தவகையில் பின்வருவன இடம்பெற்றுள்ளன.
2020 பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம், வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்> கல்லடிப்பாலம்> திறந்தவெளிக் காண்பியக் காட்சி> மட்டக்களப்பு> இலங்கை
2019 பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம்> ஓவியக்கூடம்> யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்> யாழ்ப்பாணம்> இலங்கை.
2018 பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம்> வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்> கிழக்குப்பல்கலைக்கழகம்> மட்டக்களப்பு> இலங்கை
2018 பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம்> வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்> கிளிநொச்சி> இலங்கை.
2018 பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம்> வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்> திறந்தவெளிக்காண்பியக் காட்சி> சத்துருக்கொண்டான்> மட்டக்களப்பு> இலங்கை
2017 பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம்> வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்> தான்டவன்வெளி> மட்டக்களப்பு> இலங்கை.
2017 பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம்> வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்> கொக்கட்டிச்சோலை> மட்டக்களப்பு> இலங்கை.
2017 பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம்> வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்> முல்லைத்தீவு> இலங்கை.
2016 தனியாள் கண்காட்சி> சமூக நீதிக்கான நிறுவகம்> அவுஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம்> சிட்னி> அவுஸ்திரேலியா
2011 தனியாள் கண்காட்சி> காட்மண்டு சட்டத்துறைக்கான கல்வியகம்> நேபாளம்.
2010 தனியாள் கண்காட்சி> கலை மற்றும் சமூகவிஞ்ஞானங்கள் துறை> சிட்னி பல்கலைக்கழகம்> அவுஸ்திரேலியா.
2007 வாழ்க்கைவெளி> மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு> ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி> மட்டக்களப்பு> இலங்கை.
2004 கோடுகள்> வெளி> வாழ்க்கை> திரிகோன் கலை மையம்> ஹரோல்ட் பீரிஸ் கலைக்கூடம்> கொழும்பு> இலங்கை.
2002 வண்ணங்களில் வாழ்வெழுதி> தனியாள் கண்காட்சி> மகாஜனாக்கல்லூரி> மட்டக்களப்பு.
2002 பெண்களும் சமாதானமும்> இனத்துவக் கற்கைகளுக்கும் சமாதானத்துக்குமான மையம்> பெயார் வூற் (டீயசநகழழவ) கலைக்கூடம்
2001 இனவித்தியாசங்களைக் கொண்டாடுதல்> பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு லயனல்வென்ட் ஓவியக்கூடம், கொழும்பு> இலங்கை.
1999 வடகிழக்கின் ஐந்து ஓவியர்களின் காட்சிப்படுத்தல், வெஸ்லிக் கல்லூரி> கல்முனை> இலங்கை.
1999 ஹேக் சமாதானத்துக்கான வேண்டுகோள் மாநாடு> ஒல்லாந்து.
1998 தனியாள் காட்சிப்படுத்தல்> வண்ணங்களில் உணர்வெழுதி> சாள்ஸ் மண்டபம்> மட்டக்களப்பு. இலங்கை.
1998 வட - கிழக்கு ஒவியர்களின் காட்சிப்படுத்தல், வட - கிழக்கு மாகாணசபை> திருகோணமலை> இலங்கை.
1998 பெண்களின் படைப்பாற்றல்களைக் கொண்டாடுதல்> அரசசார்பற்ற பெண்கள் நிறுவனங்களின் கூட்டமைப்பு> தேசியக் கலைக்கூடம்> கொழும்பு> இலங்கை.
1997 பங்கேற்பாளர் சர்வதேச கலைஞர்கள் முகாம் (கந்தளம) மற்றும் காட்சிப்படுத்தல்> தேசிய கலைக்கூடம்> கொழும்பு. இலங்கை.
1991 சமகால இளம் ஓவியர்களின் கண்காட்சி> ஜோர்ஜ் கீற் மன்றம்> கொழும்பு> இலங்கை.
1989 தனியாள் காட்சிப்படுத்தல்> பிரெஞ்ச் நட்புறவுக் கழகம்> யாழ்ப்பாணம். இலங்கை.
1988 பெண் ஓவியர்களின் காட்சிப்படுத்தல்> பெண்கள் ஆய்வு வட்டம்> யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்> யாழ்ப்பாணம் இலங்கை.
ஓவியச் செயல்வாதியாக...
ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண்ணிலைவாத ஓவியக் கலைஞியாகத் தன்னை வெளிக்காட்டிய கமலா வாசுகி அவர்கள் கலைக்கூடங்களைத் தளமாகக் கொண்ட நவீன ஓவியக் கலைஞியாகவும் விளங்கும் அதேவேளை தன்னுடைய ஓவியக் கலையாக்க வல்லமைகளைப் பயன்படுத்திச் சமூகங்களின் அடிமட்டத்திலிருந்து சாதாரண மக்களின் கருத்து வெளிப்பாடுகளை அவர்களுடைய சவால்களை வெளிக்கொண்டு வந்து பொது வெளியில் பகிர்வதற்கான ஆக்கபூர்வமான காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாகப் பலதரப்பட்ட ஒடுக்குமுறைகளுக்குள்ளாகும் மக்களுடன் ஓவியத்தை மையப்படுத்தி உரையாடல்களை முன்னெடுக்கும் காரியங்களில் கவனஞ் செலுத்தி வருகிறார். பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட> வன்முறைகளுக்குள்ளான பெண்களுடன் தொடர்ச்சியகப் பணியாற்றி அவர்களின் வல்லமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான ஊடகமாக ஓவியக் கலையாக்கத்தை இவர் சிறப்பாகப் பயன்படுத்தி வருகின்றார். இந்த ஓவியக் கலையாக்கங்களினூடாகத் தத்தமது வல்லமைகளை இனங்கண்டு அவற்றைப் பிரயோகத்திற்குக் கொண்டு வந்த பல்வேறு நபர்களை நாம் கண்டு வருகின்றோம்.
வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள் குழுவின் இணைப்பாக்குனராக...
கமலா வாசுகி அவர்கள் ஓவியத்தை ஊடகமாகக் கொண்டு கலைச் செயல்வாதத்தில் பங்குபற்றி வரும் பின்புலத்தில் இளம் ஓவியர்கள் பலர் இவருடன் இணைந்து பணியாற்றும் நிலைமைகள் வலுவடைந்துள்ளன. இவ்வாறு இணைந்து இயங்கிய ஓவியர்களுடன் பால்நிலைப் பாராபட்சமற்ற வன்முறைகளுக்கு எதிரான வாழ்வியலைப் பிரயோகத்திற்குக் கொண்டு வருவதற்கும் அவற்றை ஓவியச் செயல்வாதமூடாகப் பொது வெளியில் பகிர்வதற்குமான அனுபவங்களையும் பயிற்சிகளையும் இவர் வழங்கியதனூடாக ஈழத்துத் தமிழ்ச் சூழலில் வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள் குழு உருவாக்கம் பெற்றதுடன் பொது வெளியில் இக்குழுவினர் தமது படைப்புக்களை இலங்கையின் பல்வேறு இடங்களிலும் கூட்டு ஓவியக் கண்காட்சிகளாக நடத்தியும் வருகின்றனர். இந்தவகையில் பின்வரும் கூட்டு ஓவியக் காட்சிகள் இதுவரை வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்களினால் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2017 பெப்ரவரியில் முல்லைத்தீவில்; 03 நாள்கள்
2017 மார்ச்சில் மட்டக்களப்பு> கொக்கட்டிச்சோலையில்; 02 நாள்கள்
2017 செப்டெம்பரில் மட்டக்களப்பு> தாண்டவன்வெளியில் 02 நாள்கள்
2018 பெப்ரவரியில் மட்டக்களப்பு> சத்துருக்கொண்டான் திறந்தவெளிக்காட்சி 01 நாள்
2018 பெப்ரவரியில் யாழ் பல்கலைக்கழக, ஓவியக் கூடத்தில் 03 நாள்கள்
2018 டிசம்பரில் கிளிநொச்சியில் 02 நாள்கள்
2018 டிசம்பரில் கிழக்குப்பல்கலைக்கழகம் நுண்கலைக்கூடத்தில் 02 நாள்கள்
2020 பெப்ரவரியில் மட்டுநகர் பழைய கல்லடிப்பாலத்தில் திறந்தவெளிக்காட்சி 01 நாள்
வன்முறைகளுக்கு எதிரான செயற்பாட்டாளராக...
கமலா வாசுகி அவர்கள் தனது கலைப்படைப்புக்களுடாக பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராகத் தீவிரமாக வினையாற்றும்; ஒரு மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளராகக் காட்சி தருகின்றார். அதாவது வன்முறைக்குப் பதில் வன்முறை என்ற ஆணாதிக்கச் சிந்தனை முறைமையிலிருந்து விலகி வன்முறையின் கொடூரத்தை மனிதாபிமானம் உள்ள எவருக்கும் உறைக்கும் விதத்தில் வெளிப்படுத்தும் பெண்ணிலைவாதிகளின் ஆக்கபூர்வமான எதிர்ப்பு வழிமுறைகளை உள்வாங்கி அதனூடாக வன்முறைகளுக்கு எதிராக வினையாற்றும் துணிச்சல்மிக்க ஒரு கலைச் செயற்பாட்டாளராக இவர் இயங்கி வருகின்றார்.
இவருடைய 'பிள்ளையார் பறை' தமிழ்ச் சமூகத்தின் சாதி அடக்கு முறைமைக்கு எதிரான வெளிப்பாடாகவும்> 'வெசாக்-2000' மட்டுநகரில் வெசாக் தினத்தன்று நடைபெற்ற கொலைகளுக்கு எதிரான வெளிப்பாடாகவும்> கிருசாந்தி குமாரசாமி எனும் பெண்ணின் கொலைக்கு எதிரான வெளிப்பாடாகக் 'கிருசாந்தி' எனும் ஆக்கமும்> ஆயுதக்குழுக்களுக்காகச் சிறுவர்களைப் பலவந்தமாகப் பிடிக்கும் பலாத்காரத்திற்கு எதிரான குரல்களாக 'என் குழந்தை போருக்கல்ல' ஓவியங்களும்> காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் தாய்மாரின் போரட்டத்தை அதன் நியாயத்தை எடுத்துரைக்கும் ஆக்கமாக 'அரச இலைப் பிரார்த்தனை' எனும் ஆக்கமும் காணப்படுகின்றன.
இதுபோல் கமலா வாசுகியின் ஒவ்வொரு கலையாக்கங்களும் சமூகங்களில் மனித குலத்திற்கும்> இயற்கைக்கும் எதிராக நடைபெறும் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றும் ஆக்கங்களாகவே காணப்படுகின்றன. இவருடைய ஒவ்வொரு கலைப்படைப்புக்களையும் ஆழ்ந்து கவனிக்கும் போது ஒடுக்குமுறைமைகளுக்கு எதிரான இவருடைய ஆக்கபூர்வமான எதிர்வினைகளைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகின்றது.
தனியாளாக ஒரு கலைஞியாக கலையாக்கங்களுடாக ஒடுக்குமுறைமைகளுக்கு எதிராக வினையாற்றும் அதேவேளை குழு நிலையில் அமைப்பாகவும் தனது கலையாக்க வழிமுறைகளுக்கூடாக வன்முறைகளுக்கு எதிராக வினையாற்றும் நடவடிக்கைகளிலும் இவர் ஈடுபட்டு வருகின்றார்.
இந்தவகையில் போர்க்காலத்தில் சகல தரப்பினராலும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டமாக மட்டுநகர் அரசடிச் சந்தியில் நடைபெற்ற பெண்கள் மீதான வன்முறைகளின் சாட்சியாக வன்முறைகள் நிகழ்ந்த போது பெண்கள் அணிந்திருந்த ஆடைகளின் காட்சி எனும் செயற்பாடு நடைபெற்றிருந்தது. சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நடவடிக்கையில் அக்காட்சியினை ஒழுங்கமைக்கும் கலைச் செயற்பாட்டாளர்களுள் ஒருவராக கமலா வாசுகி அவர்கள் செயலாற்றியிருந்தார். சமூகங்களில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளின் எதார்த்த நிலையினைத் தோலுரித்துக் காட்டிய இக்காட்சி இதனைப்பார்த்த பலரதும் உள்ளங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.
நீதிக்கான பறையிசைக் கலைஞியாக...
பறையிசை சமூக ஒடுக்குமுறையின் குறியீடாக இருக்கும் சூழலில் பெண்கள் பறையடிப்பது என்பது மிகுந்த சவாலுக்குரியதாகிய நிலையில் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிரான கலையாக்க நடவடிக்கைகளுள் ஒன்றாக நீதிக்கான பறை என்று பெண்கள் குழுவினர் பறையிசைத்து நியாயம் கேட்கும் செயற்பாட்டினை 2015 இல் கமலா வாசுகி அவர்கள் இணைப்பாக்கஞ் செய்திருந்தார்.
மிகுந்த சவால்களுக்கு மத்தியில் பறையிசைக்க ஆர்வத்துடன் முன்வந்த பெண்ணிலைவாத நடவடிக்கைகளில் பங்கெடுக்கும் சகோதரிகளை ஒன்றிணைத்து பறையிசையில் துறைபோர்ந்த கலைஞர்களின் வழிப்படுத்தலில் தொடர்ச்சியான பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டு இந்த நீதிக்கான பறைச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு பொது வெளிகளில் பெண்கள் பறையறைந்து நியாயம் கேட்கும் செயற்பாடு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனைத் தற்போது சமதை பெண்ணிலைவாத நண்பிகள் குழுவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிரான ஆண்கள் குழுவின் உருவாக்குனராக...
பெண்ணிலைவாத நடவடிக்கைகளுள் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிரான ஆண்கள் குழுவினரை உருவாக்கும் செயற்பாடுகள் குறித்து கருத்து விளக்கங்களும் உரையாடல்களும் முன்வைக்கப்பட்ட பின்புலத்தில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் கமலா வாசுகி அவர்கள் 2004 ஆம் ஆண்டு ஈடுபட்டிருந்தார். சுமார் ஆறு மாத காலம் மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவினைச் சேர்ந்த ஆண்களுடனும் உள்ளுர்க் கலைஞர்களுடனும் கலையாக்கங்களை மையமாகக் கொண்ட கலந்துரையாடல்கள் களப்பயிற்சிகள் ஊடாக பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிரான ஆண்கள் குழுவினர் உருவாகுவதற்கான இணைப்பாக்கத்தினை இவர் வழங்கியிருந்தார். இச்செயற்பாடு பெண்ணிலைவாதத்தின் பல்பரிமாணங்களை அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கும் அது வலியுறுத்தும் வாழ்வியலைக் கடைப்பிடிப்பதற்கும் ஏற்ற வழிப்படுத்தல்களை வழங்கியிருந்தமை கவனத்திற்குரியது.
கருத்து ஓவியையாக...
தமிழ்ச் சூழலில் கருத்தோவியம் அல்லது கேலிச்சித்திரம் (காட்டூன்) என்பது மிகப்பெரும்பாலும் ஆணாதிக்க அரசியலை மையமிட்டும்> பெண்களுக்கு எதிரான கருத்துக்களைக் கேலியாகப் பரப்புவதற்கும் ஏற்றவாறான ஓர் ஊடகமாகவே பிரயோகிக்கப்பட்டு வரும் பின்புலத்தில் கமலா வாசுகி அவர்கள் கருத்தோவியங்கள் ஊடாக பெண்ணிலைவாதச் சிந்தனைகளை மிக எளிமையாக வெளிப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். இவருடைய கருத்தோவியங்கள் ஒரே பார்வைக்குரியதாகத் தொகுக்கப்படும் போது அதன் முக்கியத்துவத்தை நாம் கண்டுகொள்ள முடியும்.
பாடலாசிரியையாக...
கமலா வாசுகி அவர்கள் காண்பியக் கலையாக்கங்களில் தனது முழு அளவிலான ஈடுபாட்டைச் செலுத்தும் அதேவேளை தேவையான சந்தர்ப்பங்களின் போது காத்திரமான பாடல்களை எழுதி அதனைச் செயல்வாதப் பாடல்களாக முன்னெடுப்பதில் ஆர்வங்காட்டி வருகின்றார்.
இவருடைய பாடல்கள் சமூகத்திற்குப் பரீச்சயமான உள்ளுர் இசை முறைமைகளை அடிப்படையாகக் கொண்டு எல்லோராலும் இலகுவாகப் பாடக்கூடிய விதத்தில் ஆக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவினரதும்> சமதை பெண்ணிலைவாத நண்பிகள் குழுவினதும் கலையாக்கச் செயற்பாடுகளில் இத்தகைய பாடல்கள் முக்கியமாகப் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக இயற்கையினைப் பற்றி இவர் எழுதியுள்ள வாழிப்பாடல் பின்வருமாறு காணப்படுகின்றது.
தந்தனத னாதனத னாதனத னானா
தனனாதா னாதந்த னாதந்த னானா(2)
பூமியே இயற்கையே நீ வாழி வாழி
பல்லுயிரும் வாழ உன் வரம் தந்தாய் வாழி
மாரியே நீர் பொழிவாய் நீ வாழி வாழி
ஊற்றுக்கள் சொரியட்டும் நீர் வாழி வாழி
காற்றுடன் எரிக்கும் வெயில் பனிப் பொழிவும் வாழி
பொங்கும் கடல், மலைகளுடன் பல்மண்ணும் வாழி
தந்தனத னாதனத னாதனத னானா
தனனாதா னாதந்த னாதந்த னானா
மண்ணுக்குள் வாழும் நம் உயிர்கள் வாழி
காற்றிலும் கலந்துள்ள சிற்றுயிர்கள் வாழி
ஓடுமுயிர் ஊரும் உயிர் பறக்கும் உயிர் வாழி
நிற்பதுவும் நடப்பதுவும் நீந்துவதும் வாழி
ஆழத்தில் வேரூன்றும் பெருமரங்காள் வாழி
அடியோடி நிலம் பரவும் புல்லினங்காள் வாழி
தந்தனத னாதனத னாதனத னானா
தனனாதா னாதந்த னாதந்த னானா
பூமியே இயற்கையே நீ வாழி வாழி
பல்லுயிரும் வாழ உன் வரம் தந்தாய் வாழி
சந்திரரே சூரியரே வாழிய வாழி
அண்ட சராசரங்கள் வாழி நீடூழி!!!
(ஆக்கம் - கமலா வாசுகி – 29.01.2021)
புனைகதை எழுத்தாளராக... கவிஞராக...
ஒரு பெண்ணிலைவாதியாகப் பல்வேறு ஒடுக்கு முறைமைகளை எதிர்கொண்ட பெண்களுடன் பல்வேறு தளங்களில் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வரும் இவர் தான் கேட்டறிந்த துயரமான கதைகளை உள்வாங்கி அவற்றைத் தடுப்பதற்காகச் சமூகத்திற்குப் பகிரும் நோக்குடன் அவற்றைப் புனைகதைகளாகவும் கவிதைகளாகவும் ஆக்கி சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தாரின் பெண் சஞ்சிகையூடாக வெளியிட்டு வந்துள்ளார். இந்த வகையில் இவருடைய நாககன்னிகள் என்ற கதைகளும்> சிறுவர்களுக்காக ஆக்கப்பட்ட 'பூச்சிகள் பறவைகள் விலங்குகளுடன் வாழ்வோம்' எனும் கவிதைகளும் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
நாடக அரங்கின் காண்பியக் கலைஞியாக...
ஈழத்துத் தமிழ் நாடக அரங்க வரலாற்றில் 1980 - 1990 களில் யாழ் குடா நாட்டில் உருவாக்கம் பெற்ற நாடக அரங்க ஆற்றுகைகள் குறிப்பிடத்தக்கவையாகக் காணப்படுகின்றன. இந்த நாடக அரங்க நடவடிக்கைகளில் காண்பியக் கலைஞியாக இவர் செயலாற்றியுள்ளார். சி.ஜெயசங்கரின் தம்மதுபிவத்தின்கதை> திருக்குற்றாலக் குறவஞ்சி> நவீன பஸ்மாசுரன் முதலிய நாடகங்களுக்கும்> கிழக்கில் இரண்டாயிரமாம் ஆண்டிலும் 2010 ஆம் ஆண்டிலும் கலாநிதி சி.மௌனகுரு அவர்களின் நெறியாளுகையில் தயாரிக்கப்பட்ட இராவணேசன் நாடகத்திற்கான உடை வடிவமைப்பாளராகவும் பங்களிப்பு வழங்கியுள்ளார்.
இதேவேளை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினால் இரண்டாயிரமாம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தமிழ்ப்பண்பாட்டு இசையணியின் உடை வடிவமைப்பினையும் இவர் செய்துள்ளார். தமிழர் பண்பாட்டின் பாரம்பரிய உடைகளின் வடிவமைப்புக்களைக் கவனத்திற் கொண்டு இதற்கான உடை வடிவமைப்பினை இவர் உருவாக்கியிருந்தார்.
நூல்கள்
2019 2019 A – Z of conflict, சமகால மும்மொழி ஓவியர்களின் ஆக்கங்களின் தொகுப்பு> Raking Leaves,
2016 நம்பிக்கையின் வாக்குமூலம்> கவிதைகளும் ஓவியங்களும் தொகுப்பு> சிறகுநுனி> மட்டக்களப்பு
2006 பூச்சிகள் பறவைகள் விலங்குகளுடன் வாழ்வோம்> சிறுவர்களுக்கான கோட்டோவிய கவிதைப் புத்தகம்.
1998 வர்ணங்களில் உணர்வெழுதி> ஓவியப்பிரதிகளின் தொகுப்பு


.jpeg)

.jpeg)
.jpeg)




