மனோ கணேசன் உள்ளிட்ட த. மு.கூட்டணி எம்.பிக்கள் சந்தோஷ் ஜாவுக்கு பிரியாவிடை!

 



இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வி. எஸ். இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்த பிரியாவிடை மதிய விருந்தில் கலந்துகொண்டார்.
இந்திய வம்சாவளித் தமிழர் சமூகத்துக்கு ஆதரவளிக்கும் பணிகளில் தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் இணைந்து பணியாற்றியமை சிறந்த அனுபவமாக அமைந்தது என உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார்.
மேலும், இலங்கை மக்களின் நலனில், குறிப்பாக இந்திய வம்சாவளித் தமிழர் சமூகத்தின் நலனில் இந்தியா கொண்டுள்ள அர்ப்பணிப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவின் உயிருள்ள பாலமாக இந்திய வம்சாவளித் தமிழர் சமூகம் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.