எல் நினோ (El Niño) காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் கடந்த சில மாதங்களாக இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் மாலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வடகிழக்கு பருவமழைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், எல் நினோவின் தாக்கம் எதிர்வரும் காலங்களில் மாற்றமடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2027ஆம் ஆண்டு ஜனவரி மாத ஆரம்பம் முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைவீழ்ச்சி கணிசமாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவும் சராசரிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் பின்னர் மழைவீழ்ச்சி படிப்படியாகக் குறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளின்படி, எல் நினோவின் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும் என்பதுடன், அந்தக் காலப்பகுதி முழுவதும் இலங்கையில் மழைவீழ்ச்சி குறைவடைய வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.





