அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற இரண்டாம் மொழி சிங்களப் பேச்சுப் போட்டியில், மாத்தளை மாவட்டம், இரத்தோட்டை இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி R.S.B. தருஷி நவோத்யா இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இலங்கையின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 18 திறமையான மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், தனது பேச்சாற்றலையும் மொழித் திறனையும் சிறப்பாக வெளிப்படுத்திய தருஷி நவோத்யா இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இப்போட்டியில் அவர் பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலம் தேசிய மட்டப் போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை பாடசாலைக்கும், பெற்றோருக்கும், இரத்தோட்டை மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் விடயமாக அமைந்துள்ளது.
மாணவியின் இந்த வெற்றிக்குப் பின்னணியில் அர்ப்பணிப்புடன் வழிகாட்டிய ஆசிரியை H.M.P.G. சந்திரகுமாரி ஹேரத், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினருக்குப் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இளம் வயதிலேயே மொழித்திறன் மற்றும் பேச்சாற்றல் மூலம் சாதனை படைத்துள்ள மாணவி தருஷி நவோத்யா, தேசிய மட்டப் போட்டியிலும் வெற்றிபெற்று மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.





