வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய “அமுத விழா நடை பவனி” நேற்று 28.11.2026 சனிக்கிழமை அமர்க்களமாக சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி. சு. ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ் , முன்னாள் கிழக்கு மாகாண செயலாளர் மூ.கோபாலரெத்தினம், முன்னாள் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன் பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக அங்குரார்ப்பண நிகழ்வு தொடர்ந்து அமுத விழா நினைவுப்பலகை திரை நீக்கம் என்பன நடைபெற்றன.
56 வருட அணிகள் பங்கேற்ற அமுத விழா ஊர்தி ஊர்வலம் களுதாவளை வரை சென்று மீண்டும் திரும்பி குருக்கள் மடம் வரை சென்று திரும்பியது. பழைய புதிய மாணவர்கள் மட்டில்லா மகிழ்ச்சியுடன் ஆரவாரமாக ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.
80 ஆண்டு கால கல்விப் பயணத்தை கொண்டாடும் இந்த அமுத விழா நடை பவனியில், பிரதி அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.





