மட்டக்களப்பு புதூர் பகுதியில் இயங்கி வருவதாகக் கூறப்படும் ஏழு பேர் கொண்ட குழுவினரின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலில் இளைஞரின் இதயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொதுமக்கள் தகவல்களை வழங்கி உதவுமாறு பாதிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





