2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதியுடன் நிறைவடையும்.

 


2026ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, 2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை கல்வியாண்டின் முதல் தவணை ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை நிறைவடையும் வரை கல்வி மற்றும் பரீட்சை நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலை தவணையை நிறைவு செய்தல், மீண்டும் ஆரம்பித்தல் மற்றும் கல்வி, பரீட்சை நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்லுதல் தொடர்பான வழிகாட்டல்களையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தல்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், மாகாணக் கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.