பெட்ரோலின் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு .

 


லங்கா ஐ.ஓ.சி நிறுவனமானது ஒரு லிட்டர் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலையை நேற்று (04) நள்ளிரவு முதல் ரூ. 20ஆல் உயர்த்த தீர்மானித்துள்ளது.

அதன்படி, லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு லிட்டர் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை ரூ. 495-லிருந்து ரூ. 515-ஆக உயரும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், சினோபெக் நிறுவனமும் ஒரு லிட்டர் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலையை இன்று (04) நள்ளிரவு முதல் ரூ. 20 உயர்த்தியுள்ளது.

 அதன்படி, சினோபெக் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு லிட்டர் ஆக்டேன் 95 பெட்ரோலின் விலையும் ரூ. 495-லிருந்து ரூ. 515-ஆக உயரும் என கூறப்பட்டுள்ளது.

 இந்நிலையில் திருத்தப்பட்ட விலையானது இன்று நள்ளிரவு முதல் அனைத்து லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் எரிபொருள் நிலையங்களிலும் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.