ஏறாவூர்ப் பற்று #பிரதேசத்தில் எழுச்சிமிகு வீதி நாடகம் - 04.11.2026













ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் #உற்பத்தித் திறன் #மாதிரிக் கிராமத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட #விழிப்புணர்வு வீதி நாடகம் #வந்தாறுமூலை- கிழக்கு இத்தியடிப் பிள்ளையார் வீதியில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.

கல்வி, சுகாதாரம், ஆன்மீகம், சுற்றுச்சூழல்  பொருளாதாரம் மற்றும் உளநலம் முதலான விடயங்களை மையப் பொருளாகக் கொண்டு #குடும்ப உணர்வு #கிராம உயர்வு
எனும் தலைப்பில் இடம்பெற்ற இவ் வீதி நாடகத்தினை #பொதுமக்கள் பாடசாலை #மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பார்வையிட்டனர்.

#கிளீன் ஸ்ரீலங்கா என்றும், #நேர்மை வாரம் என்றும், நல்லாட்சியுடன் கூடிய நல்ல சமுதாயத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்றும் திட்டங்களை தீட்டி செயற்படுகின்ற இக்காலத்தில் இத்தகைய நாடகங்களை பாடசாலை மற்றும் பொதுமக்கள் மத்தி யிலும் போடுகின்ற போது மாற்றம் ஏற்படும் என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித் தனர். அத்துடன் ஏறாவூர்ப் பற்று பிரதேச #செயலகத்திற்கும் நன்றிகளைத் 
தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வானது #கதிரவன் கலைக் கழகம்  பொன்விழா ஆண்டின் முன்னெக்கும் கலை இலக்கிய பண்பாடு மற்றும் சமூக முன்னேற்ற நிகழ்வுகளில்  67ஆவது நிகழ்வாக பதிவு செய்யப்படுகின்றது.