சென்னை ஐஐடி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளார்.
எதிர்வரும் 11 ஆம் திகதி சென்னை வருகை தரும் பிரதமர், பூந்தமல்லி - வடபழனி இடையிலான புதிய மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை ஐஐடி வளாகத்துக்குச் செல்லும் பிரதமர், அங்கு உருவாக்கப்பட்டுள்ள 'இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை' உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், தற்போது இந்த மையத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





