பெரும் வறட்சியை நோக்கி நகரும் மட்டக்களப்பு மாவட்டம்.

 

பெரும் வறட்சியை நோக்கி நகரும் மட்டக்களப்பு மாவட்டம்: அரசாங்கத்தின் நடவடிக்கை | Batticaloa Moving Towards Severe Drought

தற்போது எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை மற்றும் மாவட்டத்தின் மக்களின் குடிநீரை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கான முழு நடவடிக்கையும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க உடனான விசேட கலந்துரையாடல், மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

 இதன்போது குடிநீர் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், ''எல் நினோ தாக்கத்தினால் மொனராகலை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் வழங்கும், பிரதானமாக உன்னிச்சைக் குளத்தில் இருந்து வருகின்ற நீர் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்தநிலையில் மழைவீழ்ச்சி இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கும் என வானிலை அவதான நிலையத்தின் ஊடாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் குடிநீர் பற்றாக்குறையை எதிர் காலத்தில் தடுத்துக் கொள்வதற்காகவும் மக்களின் குடிநீர் பிரச்சனையை பூர்த்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதில்பிரதேச சபைகள் ஊடாக பவுசர் மூலம் வழங்கப்படுகின்ற தண்ணீருக்கு செலவழிக்கும் நிதிகளை மீள் அழிப்பது தொடர்பாகவும் இருக்கும் சுற்றுநிருபத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாகும்.

பிரதேச சபைகள் ஊடாக வழங்குகின்ற நீரை தொடர்ச்சியாக வழங்குவதற்கும் அதற்கான நிதியை அரசின் ஊடாக வழங்கப்படும்" என கூறியுள்ளார்.