மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா 2026.09.01 செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

 

 





































கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புடையதும் தொன்மை வாய்ந்ததுமான மகா துறவி சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா  2026.09.01 செவ்வாய்க்கிழமை நண்பகல்12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது

முதல் எட்டு நாட்களும் திருவிழாக்கள் நடைபெற்று, ஒன்பதாம் நாளாகிய 09.09.2026 புதன் கிழமையன்று பி.ப  தேர்த்திருவிழாவும், பத்தாம் நாளாகிய 10.09.2026 வியாழன் கிழமை காலை சமுத்திர தீர்த்தோற்சவமும் இடம்பெற்று இவ்வாண்டிற்கான மஹோற்சவ பெருவிழா இனிதே நிறைவடையவுள்ளது.

இலங்கைத் திருநாட்டில் ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயங்களில் தமிழில் மொழியில் மாத்திரம் வேத பாராயணங்கள் ஓதப்பட்டு முருகப்பெருமானிற்கு பூசை வழிபாடுகள் இடம்பெறும் ஒரேயொரு ஆலயமாக இவ்வாலயம் திகழ்வதும் குறிப்பிடத்தக்கது.