இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டிய நிலையில் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

 


யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டிய நிலையில், தீ காயங்களுக்கு உள்ளாகியதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம் இன்றையதினம்(01) இடம்பெற்றுள்ளது.

 வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.