தொழில்நுட்ப உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்பிள் நிறுவனத்தின் சிறப்பு அறிமுக நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"Surprise and shine" என்ற தொனிப்பொருளில் அப்பிள் பார்க் வளாகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அப்பிள் நிறுவனத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள மடிவகை ஐபோன் (Foldable iPhone / iPhone Ultra) மற்றும் அடுத்த தலைமுறை ஐபோன் 18 புரோ (iPhone 18 Pro) தொடர்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பொறுப்பேற்றுள்ள ஜான் டெர்னஸ் (John Ternus) தலைமையில் நடைபெறும் முதல் மாநாடு இதுவென்பதுடன், இதில் புதிய அப்பிள் வாட்ச் மற்றும் மென்பொருள் புதுப்பிப்புகளும் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





