எஜமானின் பிரிவை தாங்க முடியாமல் உயிர் விட்ட வளர்ப்பு நாய் .

 


இந்திய மத்திய பிரதேசத்தில், தனது உரிமையாளரின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், இறுதி ஊர்வலத்தின் போதே வளர்ப்பு நாய் ஒன்று உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் பெடுல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் ஜெயின் என்பவர் டுகி என்ற குறித்த நாயை கடந்த 15 ஆண்டுகளாகத் தனது குடும்பத்தில் ஒருவராக வளர்த்து வந்துள்ளார்.

உடல்நலக்குறைவால் பிரதீப் ஜெயின் காலமான நிலையில், அவரது உடலைப் பார்த்ததிலிருந்தே அந்த நாய் மிகுந்த சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன், இறுதிச் சடங்கின் போது, தனது எஜமானரின் அருகே அமைதியாக நின்றிருந்த அந்த நாய், ஊர்வலம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்தது.

இறுதியில், பிரதீப் ஜெயின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே, அவரது செல்ல நாயான டுகியும் அடக்கம் செய்யப்பட்டது.