கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் 71 பயனாளிகளுக்கு சுமார் 71 மில்லியன் பெறுமதியான காசோலைகள் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில்வழங்கி வைப்பட்டுள்ளது.

 











வரதன்   ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் புனரமைப்பதற்குமான நிதி உதவிக் காசோலைகள் பயனாளிகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் 71 பயனாளிகளுக்கு சுமார் 71 மில்லியன் பெறுமதியான காசோலைகள் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நேற்று பிற்பகல் வழங்கி வைப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் ஞா.சுகுமாரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கிவைத்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்ட 71 பயனாளிகளில் 30 பேருக்கு 150,000ரூபா வீதமும் 17 பேருக்கு 100,000ரூபா வீதமும், 24 பேருக்கு 40,000ரூபா வீதமும் காசோலைகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் எஸ்.விநோராஜ், கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளர் பிரிதௌஸ் நளிமி உள்ளிட்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் உயரதிகாரிகள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.