கொழும்பின் புறநகர்ப் பகுதியான மீகொடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற அதிர்ச்சி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மீகொட பகுதியில் வீதியோரமாக அமைக்கப்பட்டிருந்த அன்னதான வரிசையில் பொதுமக்கள் நின்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த சிற்றூந்து (Car) ஒன்று அவர்கள் மீது வேகமாக மோதி தடம் புரண்டுள்ளது.
விபத்தில் சிக்கி 3 ஆண்களும் 3 பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்த மேலும் 6 பேர் அவசர அவசரமாக மீட்கப்பட்டு ஹோமகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் மற்றும் சிற்றூந்தின் ஓட்டுநர் தொடர்பில் மீகொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





