மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மே தின ஊர்வலமும் நிகழ்வும்!!








தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வானது மட்டக்களப்பு பட்டிப்பளையில் இடம்பெற்றது.

கொக்கட்டிச்சோலை சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மேதின பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் ஸ்ரீநாத், அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டதுடன் கோசங்களை எழுப்பியவாறு பதாதைகளை ஏந்தியவண்ணம் அலங்கரிக்கப்பட்ட வாகனப் பேரணி பட்டிப்பளை வைரவர் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்ததும் அரங்க நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

பொலிசாரின் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்ற குறித்த மேதின நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி மாணவர்களின் வரவேற்பு நடனம், ஆன்மீக அதிதி உரைகள் என்பன இடம்பெற்று அதனைத் தொடர்ந்து 
மேதின பிரகடன உரைகள், பட்டிமன்றம் மற்றும் அதிதிகள் உரைகள் என்பன இடம்பெற்றது.