பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனைபுரிந்த 7 வயது இந்திய சிறுவன்.

 

 


 இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் இஷாங்க் சிங் (Ishank Singh), இலங்கையிலிருந்து இந்தியா வரையில் பாக்கு நீரிணையை 9 மணி நேரம் 50 நிமிடங்களில் நீந்திக் கடந்து (29 கிலோமீற்றர் தூரம்) உலக சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு இலங்கையின் தலைமன்னாரில் தனது நீச்சல் பயணத்தைத் தொடங்கிய இஷாங்க், பிற்பகல் 1:50 அளவில் தமிழ்நாட்டின் தனுஷ்கோடியை அடைந்தார்.


இந்தச் சாதனைக்காக அவருக்கு 'Universal Records Forum' (URF) அமைப்பு "இளைய மற்றும் அதிவேக பாக் நீரிணை நீச்சல் வீரர்" (Youngest and Fastest Palk Strait Swimmer) என்ற சான்றிதழை வழங்கிப் பாராட்டியுள்ளது.

இதற்கு முன் 2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெய ஜஸ்வந்த் (Jay Jaswanth) என்பவர் 10 வயதில் இந்தச் சாதனையை 10 மணி நேரம் 30 நிமிடங்களில் நிகழ்த்தியிருந்தார். அந்தச் சாதனையை இஷாங்க் முறியடித்துள்ளார்.

ராஞ்சியில் உள்ள துருவா (Dhurwa) அணையில் நாளொன்றுக்கு 4 முதல் 5 மணி நேரம் வரை தீவிரப் பயிற்சி மேற்கொண்டு, இந்தச் சவாலான கடல் நீச்சலை அவர் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

இஷாங்கின் இந்த வரலாற்றுச் சாதனைக்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உட்படப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.