த.வெ.க தலைவர் விஜய் நாளை காலை 11 மணிக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

 



தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தமிழ்நாட்டுக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார்.

ஆளுநரிடம் 113 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை இதன்போது அவர் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், மே 9 ஆம் திகதிக்கு முன்னதாக அதாவது பதவியேற்ற இரண்டு நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் விஜய்க்கு உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை வென்றது.

பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட 10 இடங்கள் குறைவாக இருப்பதால், பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின்படி, தவெக தலைவர் விஜய் நாளை காலை 11 மணிக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில், மீதமுள்ள 6 இடங்களுக்கு மற்றக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.