மருந்தகங்களில் சிறந்த முறையிலான மருந்தக நடைமுறைகளை ஏற்படுத்தும் முகமாக 72 மருந்தக உரிமையாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு .

 

 

 

 

 

















"முழு நாடும் ஒன்றாக"  "ரட்டம எகட்ட "  விஷபோதைப் போதைப்பொருள் தடுப்பு  தேசிய செயற்பாட்டு சபையினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனை விநியோகத்தை கட்டுப்படுத்தல் போன்ற பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்  மாவட்டத்தில்  சிறந்த மருந்தங்களின் நடைமுறைகள் தொடர்பாக பயிற்சி கருத்தரங்கு முழு நாடும் ஒன்றாக"  "ரட்டம எகட்ட "  மாவட்ட செயலக  போதைப்பொருள் தடுப்பு  உத்தியோகத்தர் ப.தினேஸ் ஏற்பாட்டில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக பிரிவுக்குட்பட்ட  மருந்தகங்களில் சிறந்த முறையிலான மருந்தக நடைமுறைகளை ஏற்படுத்தும் முகமாக 72 மருந்தக உரிமையாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. 

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  அலுவலகம் மற்றும் 
மாவட்ட செயலக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை இணைந்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் போதை  பொருள் பாவனையை  கட்டுப்படுத்தும் வகையில்   அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் பொதுத் சுகாதார பரிசோதகர்கள் , மருந்தக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்