வராற்றுப்
பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன்
ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு கடந்த சனிக்கிழமை புராதன ஆலயத்தில்
நடைபெற்றது.
கூட்டத்தில்
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் மற்றும் ஆலய குரு
சிவஸ்ரீ சபா.கோவர்த்தன குருக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அம்பாறை
மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி, நிந்தவூர் பிரதேச கலாசார
உத்தியோகத்தர் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன்,
உறுப்பினர் சி.சிவகுமார் உள்ளிட்ட சகலஊர்ப் பிரதிநிதிகளும் கலந்து
கொண்டனர்.
சுமார் ஐந்து
மணிநேரம் நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிருவாகத் தெரிவு, பரிபாலன சபையின்
ஆலோசகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
புதிய நிர்வாக சபைத் தெரிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
அதன்படி புதிய நிர்வாக சபையின் தலைவராக மீண்டும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் மற்றும்
செயலாளராக மீண்டும் த.சண்முகநாதன் ஆகியோர் தெரிவானார்கள்.
பொருளாளராக கே.குழந்தைவடிவேல் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் நிருவாகசபை உறுப்பினர்கள், கணக்காளர்கள், ஆலோசகர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
நிருவாக
சபை உறுப்பினர்களாக அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்
பிரிவுகளையும் சேர்ந்த 21 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், 1999
ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட யாப்பின் படி சபை உறுப்பினர்கள் தேர்வு
செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
( வி.ரி.சகாதேவராஜா)
(1).jpg)











