,
ஒழுக்க
விழுமியக் கல்விக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமாகவே,
எதிர்காலத்தில் சிறந்த ஒழுக்கம் சார்ந்த தலைமுறையை உருவாக்க முடியும்.
இவ்வாறு
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அனிருத்தனன் நேற்று காரைதீவில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இந்துசமய
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட இந்து
அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான அறநெறிப்பாடசாலை பாடத்திட்டம்,
அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த
மணிமண்டபத்தில் நேற்று (2) திங்கட்கிழமை இந்துசமய கலாசார அலுவல்கள்
திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அனிருத்தனன் தலமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வுக்கு
இந்து சமயகலாசார அலுலல்கள் திணைக்களத்தின் அறநெறிக்கு பொறுப்பான உதவி
பணிப்பாளர் திருமதி அனந்தா அம்பிகைபாகன் கலந்து கொண்டு
அறநெறிப்பாடசாலையின் நோக்கம் எதிர்கால நடவடிக்கைகள், அறநெறிப்பாடசாலை
ஆசிரியர்களின் பொறுப்புக்கள் கடமைகள் ஆக்கத்திறன் போட்டிகள், குருபூசை
நிகழ்வுகள், புதிய மாணவர்களை அறநெறிக்கல்விக்கு இணைத்தல், எதிர்கால
நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.
சிறப்பு அதிதியாக காரைதீவு பிரதேச செயலக உதவிப்பணிப்பாளர் பே. பிரணவரூபன் கலந்து சிறப்பித்தார்.
அங்கு பணிப்பாளர் அனிருத்தனன் மேலும் உரையாற்றுகையில்...
நவீனத்துவம்
என்ற போர்வையில் இன்று பொதுவாக பிள்ளைகள், ஆசிரியர்களுக்கு
பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கிற விதம் குறைந்து கொண்டு வருகிறது .
இதற்கு அடிப்படை காரணம் ஒழுக்கம் சார்ந்த கல்வி முறையாக ஊட்டப்படாமையே.
எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ஒழுக்கம் சார்ந்த அறநெறிக் கல்விக்கு உதவ வேண்டும்
.அது சிறப்பான முறையில் நடைபெற அல்லது இடையூறு இல்லாமல் இருப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் .
அப்போது தான் ஒழுக்கம் அன்பு கருணை காருண்யம் விட்டுக்கொடுப்பு என்ற உயரிய பண்புகள் பிள்ளைகளிடம் உருவாகும்.
அதேபோல் அந்த பிள்ளைகள் ஆரோக்கியம் உள்ள பிள்ளைகளாக உருவாக்குவதற்கும் காரணமாக இவ் ஒழுக்கம் சார்ந்த கல்வி இருக்கும் என்றார்.
அறநெறிப்பாடசாலைபுதிய பாடத்திட்டம் தொடர்பான விளக்கத்தினை அம்பாறை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி நிகழ்த்தினார் .
அறநெறிப்பாடசாலைகளை
நடத்தும் போது பின்பற்றவேட்டிய கற்பித்தல் நுட்பங்கள், விளையாட்டுக்கள்,
தொடர்பாக விடயங்களை சைவபண்டிதர். சைவப்புலவர் வளவாளர் யோ. கஜேந்திரா
நிகழ்த்தினார்.
இந்நிகழ்வுக்கு
அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு,
அட்டாளச்சேனை, நிந்தவூர், காரைதீவு, லாகுகல, கல்முனை வடக்கு, நாவிதன்வெளி,
ஆகிய பிரதேசசெயலக பிரிவைச்செர்ந்த 348 ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன்
அம்பாறை மாவட்ட இந்துக்கலாசார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்
அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள், பாடசாலை பதிவேடு, ஆசிரியர்
குறிப்பேடு, பஞ்சாங்க நாட்கறிப்பு, பண்ணிசைக்கான சல்லாரி, கதாபிரசங்க
நிகழ்வுக்கான சப்பிலாக்கட்டை என்பன அறநெறிப்பாடசாலைகளுக்கு வழங்கி
வைக்கப்பட்டன.
ஏற்பாடுகளை திணைக்களத்தின் சார்பில் மாவட்ட இந்துகலாசார உததியோகத்தர் கு. ஜெயராஜி மேற்கொண்டார்.
( வி.ரி.சகாதேவராஜா)
















