மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் தொடர்ந்து நான்காவது நாளாகவும் இன்று 03.03.2026 எரி பொருளுக்காக நீண்ட நேரம் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் முண்டியடித்துக் கொண்டு நின்ற மக்கள் வரிசை!
எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுமென்ற அச்சத்தில் மட்டக்களப்பு தாழங்குடா பெற்றோல் நிரப்பு நிலையங்களில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றதை காண முடிந்தது.
மட்டக்களப்பு நகர், தாழங்குடா
உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான நிலைமை தொடர்கின்றது. இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் நெரிசல் தற்போது ஏற்பட்டு வருகின்றது.
ஆரையம்பதி,
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் இல்லை என வாசகங்கள் எழுதப்பட்ட பதாகை இன்று 03.03.2026 இடப்பட்டு இருந்தது ஏனைய எரிபொருள் நிலையம் மூடப்பட்டிருந்ததையும் மக்கள் வந்து திரும்பிச் செல்கின்றதையும் அவதானிக்க முடிந்தது.
அதேசமயம் டீசல்கள் வழமை போல் விநியோகிக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து, டீசல்கள் கேன்களில் நிரப்பப்படுவதையும் காண முடிந்தது.
தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ வாகனங்களையே அதிகமாக பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காணப்பட்டது










