மத்திய கிழக்கு யுத்த நிறுத்தத்திற்கு இலங்கை அரசு அழுத்தம் கொடுப்பதுடன்- எமது நாட்டின் பொருளாதார மீட்புக்கு காரணமான புலம்பெயர் தொழிலாளர்கள் நலனில் தீவிர கரிசனை எடுக்க வேண்டும் - நகர சபை உறுப்பினர் அஸ்மி கோரிக்கை. ......
ஈரானில் அப்பாவி ஆரம்ப பாடசாலை குழந்தைகளை கொத்தாக பலி எடுத்து வேட்டையை ஆரம்பித்த இந்த மத்திய கிழக்கு யுத்தத்தை நிறுத்தி அமைதியை நிலவச் செய்திடும் சர்வதேச அழுத்த செயற்பாடுகளுடன் இலங்கை அரசு விரைந்து கை கோர்க்கும் அதேவேளை
திடீர் யுத்த முன்னெடுப்புக்களால் மத்திய கிழக்கில் சிக்கி தவிக்கும் பல லட்சம் இலங்கை புலம் பெயர் தொழிலாளர்கள் நலனில் அதீத கவனம் செலுத்துவதுடன் அவசர கால நிலையில் தொழிலாளர் பாதுகாப்பு பொறி முறைகளை அரசு முன்எச்சரிக்கை தயார்படுத்தலாக ஒழுங்கமைக்க வேண்டும் என ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அஸ்மி வேண்டுகோள் விடுத்துள்ளார் -
கடந்த காலங்களில் இந்த நாடு பொருளாதார ரீதியாகவும் , இயற்கை அனர்த்தங்களிலும் சிக்கிய போதெல்லாம் நாட்டையும் நாட்டின் பொருளாதார ஸ்த்திர தன்மையையும் வழுவூட்ட வெளிநாட்டு வாழ் நம்மவர்கள் வழங்கிய உயரிய பங்களிப்புகளையும் தியாகங்களையும் கருத்திற் கொண்டு அவர்களின் நலன் சார் விடயங்களில் அரசு தீவிர கரிசனை காட்டுவதுடன்
தனது ஏகாதிபத்தியத்தை நிரூபணம் செய்யும் நோக்கில் மத்திய கிழக்கில் தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தத்தின் இறுதி அடைவு விலை மதிப்பற்ற எண்ணிலடங்கா மனித பேரழிவும் பொருளாதார நெருக்கடி நிலையும் மட்டுமே ஆகும், எமது நாட்டின் கடந்த கால யுத்த இழப்புக்களை , அதன் மூலம் பெற்ற இறுதி அடைவுகளை அனுபவமாகவும், கற்றுக்கொண்ட பாடமாகவும் கொண்டு உலகின் அமைதிக்கு முயற்சிக்கும் தரப்புடன் இலங்கை அரசு கைகோர்த்து யுத்த உடனடி நிறுத்தத்திற்கான சர்வதேச அழுத்தங்களை வழுப்படுத்த உதவிட வேண்டும் என வேண்டிக்கொள்வதுடன்,
இந்த நாடு தவறான கொள்கைகள் காரணமாக பொருளாதார ரீதியில் நலிவுற்று நின்ற போது மக்களாட்சி ஒன்றின் தேவையை உணர்ந்து அப்போதைய ஆசியாளர்களுக்கு எதிராக குரல் எழுப்பி மmmm நாட்டை மீட்கும் மக்கள் சக்தியை நிலை நாட்டவும் - சீரழிந்த பொருளாதார சூழலை மீள கட்டி எழுப்பிடவும் கடும் பாடுபட்ட இவர்களின் நலன்கள் தொடர்பில் இந்த அரசு செலுத்தும் அக்கறையே இந்த நேரத்தில் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாக அமையும் என்பதில் ஐயமில்லை,
கொலைசெய்யப்பட்ட ஈரான் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் கொமைனி அவர்களின் மறைவு அம்மக்களுக்கும் முஸ்லிம் உலகிற்கும் பேரிழப்பாகும், இத்துயர் மிகு சூழலில் அம்மக்களது வலியுடன் நாமும் இணையும் அதேவேளை
எமது தாய் நாட்டினதும் சொந்த வீட்டினதும் விடிவிற்காக தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு சென்றுள்ள எம் உறவுகளின் பாதுகாப்புக்கு ஆரோக்கியத்திற்கு இப்புனித மாதத்தில் இறைவனை பிரார்த்திப்போமாக
ந.குகதர்சன்






