முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் ஆரம்பித்த மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா
வித்தியாலய கால்கோள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கிரிக்கற்
விளையாட்டு மைதான புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (2) திங்கள்
கிழமை மாசிமக சுப வேளையில் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமதவானந்தாஜி பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.
தொடர்ந்து சிவானந்தா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட சமூகம் அடிக்கல் நாட்டினார்கள்.
( வி.ரி.சகாதேவராஜா)





