மட்டு - துஷாரா
மட்டக்களப்பு, தளவாய் வட்டாரத்திலுள்ள ரமேஷ்புரம், கணபதிநகர், ஐயன்கேணி கிராமங்களிலுள்ள அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு செங்கலடி ரமேஷ்புரம் சிறி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் (01) இடம்பெற்றது.
சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் கலந்து கொண்டு அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
மேலும் செங்கலடி, ரமேஷ்புரம், கணபதிநகர், ஐயன்கேணி, தளவாய் கிராமத்திலுள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்தும் சித்திர வேலாயுத சுவாமி ஆலய நிர்வாக சபையினர், கிராம அபிவிருத்திச் சங்கம், செங்கலடி பசுந்தளிர் விளையாட்டு கழகம், கணபதிநகர் சனசமூக நிலையம், ஐயன்கேணி ஆலய நிர்வாகம், தளவாய் மீனவர் சங்கம், செங்கலடி தளவாய் வட்டாரத்தில் உள்ள ஆலயங்கள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கான நிதி ஒதுக்கீடுள் குறித்தும் கலந்துரையாடினார்.










