உலகளாவிய
ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு
நிறைவு விழா எதிர்வரும் சனிக்கிழமை (21) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (22) ஆம்
தேதிகளில் கொட்டகலையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இதன்படி,
முதல்நாள் 21.02.2026 சனிக்கிழமை ஆன்மீக நிகழ்ச்சிகள் மற்றும் ரதபவனி
ஊர்வலம் என்பவற்றுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து மறுநாள் 22.02.2026
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிரதான நிகழ்வில் பொதுக்கூட்டம், பாராட்டு
நிகழ்வுகள் மற்றும் சிறப்பு உரைகள் இடம்பெறவுள்ளன.
முதல் நாள் சனிக்கிழமை நிகழ்வில்...
முதல்நாள் சனிக்கிழமை, (21 ) அன்று அறநெறிப் பாடசாலை விழா நடைபெறவுள்ளது .
இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், சிறப்பு அதிதிகளின் உரைகளும் இடம்பெறவுள்ளன.
காலை
விழா மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி
நீலமாதவானந்தஜி மஹராஜ் தலைமையில் நடைபெறும். இலங்கை இராமகிருஷ்ண மிஷன்
தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மஹராஜ் மாணவர்களுக்கான ஆளுமை
வளர்ச்சி உரையை வழங்குவார்.
பிரதம அதிதியாக
ஆர்டிஎம். மகேஸ்வரன் (Proprietor, RDM Tyre Factory, Kotagala) கலந்து சிறப்பிப்பார்.
சிறப்பு
அதிதிகளாக எம்எஸ்வி. அபேவர்தன (OIC, பொலிஸ் நிலையம், திம்புள்ள - பத்தனை)
மற்றும் ஜே. மேரி (பிரதி தவிசாளர், கொட்டகலை பிரதேச சபை) உரையாற்றுவார்கள்.
தொடர்ந்து மாணவர்களின் பண்ணிசை, வில்லுப்பாட்டு, கிராமிய நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
ரத ஊர்வலம்!
சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு தெய்வத் திருமூவரின் ரத ஊர்வலம் நடைபெறும்.
இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வில்...
22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.
கொட்டகலை
ராமகிருஷ்ண மிஷனில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. காலை 7.00 மணிக்கு
பண்ணிசை இலங்கை தேவார பண்ணிசை வளர்ச்சி கழகம் நிகழ்ச்சியுடன்
தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு பஜனை மாணவர்கள்,
ராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பு வரவேற்பு நடனம் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை
காலை 9.40 மணிக்கு எஸ். இராமசந்திரன் (இணைப்பாளர், ராமகிருஷ்ண மிஷன்,
கொட்டகலை) வரவேற்க ஆசியுரையை இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத்
சுவாமி அக்ஷராத்மானந்தஜி நிகழ்த்துவார்.
கலண்டர் நினைவு பரிசு வழங்கல் நடைபெறும்.
விழாவில் முதன்மை அதிதியாக நன்கொடையாளர் ஆர் .விஜயபாலன் ஜி (Athithya Tea Plantation, Kotagala) கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
விசேட அதிதியாக கொட்டகலை பிரதேச சபைத் தவிசாளர் ராஜமணி பிரசாத் கலந்து சிறப்பிப்பார்.
பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நீதிபதி கே.ஜீவராணி கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துவார்.
திருவிளக்கு பூஜை மற்றும் சாரதா மகளிர் குழு விழா 22.02.2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
திருமதி லலிதா விஜயபாலன் மகளிர் குழுவினர்களுக்கு பரிசு வழங்கி உரை நிகழ்த்துவார்.
நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரை இடம்பெற்று, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இரு தினங்களிலும் அங்கு இராமகிருஷ்ண மிஷனின் ஆன்மீக நூல்களை சிறப்பு விலைக்கழிவில் 15% பெற்றுக்கொள்ளலாம்.
( வி.ரி.சகாதேவராஜா)









