மட்டக்களப்பு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆரோக்கிய சுகவாழ்வு நிலையங்களின் (Healthy Lifestyle Clinic) சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தி, பணிகளை மேலும் துல்லியமாகவும் பயனுள்ளதாகவும் மேற்கொள்ளும் வகையில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் ஒரு திறன் மேம்பாட்டு பயிற்சியானது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேட்போர் கூடத்தில் 18.02.2026 இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்டத்தின் அனைத்து ஆரோக்கிய சுகவாழ்வு நிலையங்களில் இருந்தும் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், தாதியஉத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார மருத்தவ மாதுக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்ச்சியை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர் முரலீஸ்வரன் அவர்கள் தலைமையேற்று ஆரம்பித்து வைத்ததுடன் . தொற்றா நோய் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம். ருதேஷன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்த பயிற்சி நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
பயிற்சியின் போது, ஆரோக்கிய சுகவாழ்வு நிலையங்களின் (Healthy Lifestyle Clinic) மற்றும் தொற்றா நோய்கள் தொடர்பான முக்கிய விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் குறிப்பாக, ஆரோக்கியமான உணவுமுறை (Healthy Diet), உடற்பயிற்சி மற்றும் உடல் இயக்கத்தின் முக்கியத்துவம் (Physical Activity & Exercise), தொற்றா நோய்களைத் தடுக்கும் வழிமுறைகள், அபாயக் காரணிகள் (Risk Factors) ஆகிய விடயங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, ஒரு மணி நேர உடற்பயிற்சியானது (Practical Session) இசை நடன கல்லுாரியின் உடற்பயிற்சிக்கு பொறுப்பான போதனாசிரியர் மிருனாளினி அரவிந்தன் அவர்களால் உடற்பயிற்சி தொடர்பான செய்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், இதனை தொடர்ந்து மீளாய்வு கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு, ஒவ்வொரு ஆரோக்கிய சுகவாழ்வு நிலையங்களின் செயல்பாடுகள், அறிக்கைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் என்பன ஆய்வு செய்யப்பட்டன. இதில் சுகவாழ்வு நிலையங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், குறைபாடுகள், மற்றும் சந்தேகங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், கலந்து கொண்ட சிரேஸ்ட மருத்துவர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களும் பெறப்பட்டன.
















.jpeg)






